ஒடிசா தலைநகரில் விமரிசையாக நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் திடீர் கலாட்டா ஒன்று அரங்கேறியது. அதன்படி மணமகன் தன்னுடைய லவ்வர் , அவர் ஏற்கனவே பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து தன்னை ஏமாற்றியதாக இளம்பெண் ஒருவர் காவல்துறையினர் உடன் வந்து கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை புவனேஸ்வரில் உள்ள கல்யாண மண்டபத்தில் மணமக்களின் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அங்கு வந்த பெண் ஒருவர் ரிசப்ஷனில் போட்டோவுக்கு போஸ் கொடுத்து கொண்டிருந்த மாப்பிள்ளை மீது சராமாரியாக தாக்குதல் நடத்தினார்.
மேலும் அவர் 2021 லிருந்து காதலித்து, 2024 ல் இருவருக்கும் பெரியவர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறினார். மேலும் தன்னிடம் இருந்து அவர் 5 லட்சம் ரூபாய் வாங்கிவிட்டு ஏமாற்றியதாகவும் குற்றம் சாட்டினார். இது அங்குள்ள விருந்தினர்கள் இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து காவல்துறையினர் மணமகனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.