அப்போது அந்த வழியாக வந்த ஒரு அரசு பேருந்து மாடுகள் மீது மோதியது. அரசு பேருந்து மோதிய விபத்தில் 18 மாடுகள் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தன. இந்நிலையில் 20-க்கும் மேற்பட்ட மாடுகள் காயம் அடைந்துள்ளது.
தேவாரம் பகுதியைச் சேர்ந்த சுருளிச்சாமி என்பவர் 100-க்கும் மேற்பட்ட நாட்டு மாடுகளை உரத்திற்காக தோட்டங்களில் தொழுவமைத்து மேய்த்து வருகிறார். இவரது மாடுகள் மீதுதான் அரசு பேருந்து மோதி பயங்கர விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் அரசு பேருந்து ஓட்டுநர் அழகர்சாமி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.