பாமக மாவட்ட செயலாளர் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தைலாபுரம் தோட்டத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான கூட்டணி முடிவுகள், தேர்வு பணிகள் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி மாவட்டச் செயலாளர்கள், கட்சி பொறுப்பாளர்கள் என அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
பாமக நிறுவனர் ராமதாசுக்கும், அக்கட்சியின் தலைவர் அன்புமணிக்கும் இதய மோதல் நிலவி வந்த நிலையில், இந்த கூட்டம் நடைபெறுகிறது. அதாவது கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற சித்திரை முழு நிலவு மாநாட்டில் ராமதாஸ் பேசியதற்கு கட்சிக்குள்ளே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் மீண்டும் ராம்தாஸ் மீது அதிருப்தியில் இருக்கும் அன்புமணி இன்றைய கூட்டத்தை புறக்கணிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.