10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயத்தில் மாணவி இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
நாமக்கல் மாவட்டம் நல்லாக்கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் கவிதா (40). இவர் சாணார்பாளையத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் பிலிக்கல்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.
இன்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக இருந்த நிலையில் தேர்வில் குறைந்த மதிப்பெண் மட்டுமே கிடைக்கும் எனவும், மேலும் பொதுத்தேர்வில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயத்திலும் மாணவி இருந்து வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் துப்பட்டாவால் மாணவி திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.