'AK 64' படத்தின் அப்டேட் கொடுத்த நடிகர் அஜித்… எப்போ படப்பிடிப்பு.. எப்போ ரிலீஸ் தெரியுமா?..!!
SeithiSolai Tamil May 17, 2025 06:48 AM

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். இவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து அவர் ரேஸிங் போட்டியில் ஈடுபட்டுள்ளார். சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் சில சுவாரசிய தகவலை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, எனக்கு கிடைத்த இயக்குனர்களும், தயாரிப்பாளர்களுக்காக நான் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். அவர்கள் என்னுடைய தொலைநோக்குப் பார்வையை புரிந்து கொள்கின்றனர்.

நான் வருடத்திற்கு ஒரு சிறப்பான படங்களில் கண்டிப்பாக நடிப்பேன். என்னுடைய அடுத்த திரைப்படத்தின் படபிடிப்பு நவம்பர் மாதம் தொடங்குகிறது, அடுத்த வருடம் கோடை விடுமுறைக்கு அப்படம் வெளியாகும். ரேஸிங் சீசனில் நான் படத்தில் நடிக்க மாட்டேன் ஒரு விஷயத்தை முழு கவனத்துடன் செயல்படுத்த வேண்டும், நான் எப்போ மீண்டும் ரேசிங்கிற்கு செல்ல வேண்டும் என நினைத்தேனோ அன்று முடிவு செய்தேன் நான் மீண்டும் ஹிட்டாக வேண்டும் என. கடந்த 8 மாத காலத்தில் 42 கிலோ உடல் எடையை குறைத்துள்ளேன். டயட் சைக்கிளிங், ஸ்விம்மிங், வெஜிடேரியன் ஆகவும் மாறியதால் இது சாத்தியமானது என்று கூறியுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.