அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு வளைகுடா நாடுகளில் கடந்த 13 ஆம் தேதி தனது சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். இவர் தனி விமான மூலம் நேற்று கத்தார் நாட்டில் இருந்து அபுதாபி சென்றார். அங்கு சர்வதேச விமான நிலையத்தில் ட்ரம்பை, அந்நாட்டு அதிபர் வரவேற்றார். இதைத்தொடர்ந்து அவருக்கு 21 குண்டுகள் முழுங்க மரியாதை வழங்கப்பட்டது. இதில் இரு நாடுகளின் தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டது.
மேலும் அந்நாட்டு பாரம்பரிய முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது “Al Ayala’ என்ற பாரம்பரிய நடன முறையில் வெள்ளை உடை அணிந்த பெண்கள் வரிசையாக நின்று தலை முடியை விரித்து போட்டு நடனமாடி அமெரிக்க அதிபர் டிரம்பை வரவேற்றனர். இது பேய்களின் நடனம் என சமூக வலைதளத்தில் நெடிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.