“ஸ்கூட்டியில் சென்ற பெண்”… ஒரே நேரத்தில் அடுத்தடுத்து கார் மற்றும் பைக் மீது மோதி… பதற வைக்கும் வீடியோ..!!
SeithiSolai Tamil May 17, 2025 04:48 AM

சமூக வலைதளங்களில் தற்போது அதிர்ச்சியூட்டும் ஒரு வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு பெண் ஸ்கூட்டரை கட்டுப்படுத்த முடியாமல், ஒரே நேரத்தில் இரண்டு வாகனங்களை மோதும் காட்சி பதிவாகியுள்ளது. அந்த வீடியோ,சமூக ஊடகங்களில் வெளியாகி லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று வருகிறது.

மேலும், சம்பவ இடத்தில் அமைந்திருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளில், ஒரு வெள்ளை நிற கார் கடையின் அருகே நிறுத்தப்பட்டுள்ளது. அதன் பின்னால், ஒரு நபர் தனது குழந்தையுடன் ஸ்கூட்டரில் அமர்ந்திருக்கிறார். அந்த நேரத்தில், இரண்டு பெண்கள் ஒரு ஸ்கூட்டரில் வருகிறார்கள்.

அவர்கள், திடீரென கட்டுப்பாட்டை இழந்து, குழந்தை உடன் இருந்த நபரின் மீது மோதி, குழந்தையை கீழே விழச் செய்கிறார்கள். அதோடு மட்டுமில்லாமல், நிறுத்தப்பட்ட கார் ஓட்டுநர் வாகனத்தில் இருந்து வெளியே வரும்போது, அந்த பெண் மீண்டும் ஸ்கூட்டரின் கட்டுப்பாட்டை இழந்து, அவரையும் மோதுகிறார்.

அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒரு பயனர் “ஒரு அப்பாவின் தேவதைகளால் மட்டுமே ஒரே நேரத்தில் இரண்டு கார்களை ஓட்ட முடியும்” என நகைச்சுவையாக பதிவிட்டார். மேலும் சிலர் வாகனத்தை முறையாக ஓட்ட கற்றுக் கொள்ளவில்லை எனில் இது போன்ற அசம்பாவிதங்கள் நடைபெறும் என தங்களது விமர்சனங்களை தெரிவித்துள்ளனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.