தமிழகத்தில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்காக தற்போதே அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில் ஒருபுறம் கட்சிக்குள்ளும் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் திமுக மாணவர் அணியில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதாவது காஞ்சிபுரம், வேலூர் மற்றும் நாகர்கோவில் ஆகிய நகரங்களில் திமுக மாணவர் அணியில் நிர்வாகிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி காஞ்சிபுரத்திற்கு பாரதிதாசன், வேலூருக்கு ஆர்.அருண், நாகர்கோவிலுக்கு முகமது சாலிக் ஆகியோர நியமித்து கட்சியின் மாணவர் அணி செயலாளர் ராஜீவ் காந்தி அறிவித்துள்ளார். மேலும் 2026 ஆம் ஆண்டு தேர்தல் பணிகளை திமுக தீவிர படுத்தியுள்ள நிலையில் தற்போது இந்த மாற்றம் குறிப்பிடத்தக்கதாகும்.