தைலாபுரத்தில் பாமக மாவட்ட தலைவர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் அவரது ஆதரவாளர்களும் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து ராமதாஸ் கூறியதாவது, 2026 சட்டப்பேரவை தேர்தலில் 50 தொகுதிகளில் நாம் வெற்றி பெற வேண்டும்.
ஆட்சி அமைக்க வேண்டும் என்று அவர்களுக்கு ஆலோசனை கூறினேன். அவர்களின் ஆலோசனையையும் கேட்டு தெரிந்து கொண்டேன். தனித்து போட்டியிட்டாலும் 40 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என இலக்கு வைத்துள்ளோம்.
வருகிற 2026 தேர்தலில் நிச்சயம் கூட்டணி உண்டு. 50 தொகுதிகளில் படுத்து கொண்டே வெல்வதற்கான வித்தையை சொல்லிக் கொடுத்துள்ளேன். சிங்கத்தின் கால்கள் பழுதாகாத போது சீற்றம் இன்னும் அதிகமாக தானே இருக்கும். ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற சீற்றம் அதிகமாகி கொண்டு போகிறது.
பாமகவை பொறுத்தவரை நான் தான் ராஜா எனக் கூறியுள்ளார். ஏற்கனவே விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் இருப்பதால் பாமகவும் கூட்டணி சேருமா என்பது தெரியவில்லை. ஏனென்றால் பாமக பாஜக இருக்கும் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெறாது என திருமாவளவன் ஏற்கனவே கூறியது குறிப்பிடத்தக்கதாகும்.