இது குறித்து முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “ருமேனியாவில் நடைபெற்ற பெருமைமிக்க 'சூப்பர்பெட் செஸ் கிளாசிக் 2025' போட்டியில் வாகைசூடி, தனது முதல் கிராண்ட் செஸ் டூர் பட்டத்தை வென்றுள்ள 'நமது சென்னையின் பெருமிதம்' கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துகள்.
கிளாசிக்கல் மற்றும் பிளிட்ஸ் சுற்றுகளில் அசாதாரணமான அமைதியையும் உத்திமிகுந்த ஆழத்தையும் அவரது திறமையான ஆட்டம் வெளிப்படுத்தியது. இந்திய சதுரங்கத்தின் குறிப்பிடத்தக்க இந்த தருணத்தை தமிழ்நாடே கொண்டாடுகிறது!” என்று குறிப்பிட்டுள்ளார்.