“பயங்கரவாதிகளின் ஊடுருவல்”… தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பாதுகாப்பு அதிகாரி மின்னல் தாக்கி பலி.. ஒருவர் படுகாயம்.. பெரும் சோகம்..!!
SeithiSolai Tamil May 18, 2025 12:48 AM

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள திரிபுரா கிராமத்தில் கிளர்ச்சியாளர்கள் ஊடுருவியதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சிஆர்பிஎப் பாதுகாப்பு படையினர் நேற்று இரவு 11 மணியளவில் தேடுதல் பணியில் இறங்கினர். அப்போது பிரபோசிங் என்ற அதிகாரி வனப்பகுதியில் கிளர்ச்சியாளர்களை தேடிக் கொண்டிருந்த நிலையில் திடீரென அவர் மீது மின்னல் தாக்கியதால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாத உயிரிழந்தார்.

அதன்பிறகு மின்னல் தாக்கியதில் மண்டல் என்ற மற்றொரு அதிகாரி படுகாயமடைந்த நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இது குறித்து விசாரணை நடைபெறும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.