பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட நி லையில், இந்த திட்டம் தோல்வியடைந்ததாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-61 என்ற ராக்கெட் இன்று காலை 5.59 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.
இதில், 1,696.24 கிலோ எடை கொண்ட இ.ஒ.எஸ்-09 என்ற செயற்கைக்கோள் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிநவீன பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளாகும்.
இந்நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பி.எஸ்.எ.வி சி-61 செயற்கைக்கோள் திட்டம் தோல்வி அடைந்ததாக இஸ்ரோ விஞ்ஞானிகள் சோகத்துடன் தெரிவித்துள்ளனர். இதற்கான காரணங்கள் குறித்து ஆராயப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து இன்று அதிகாலை 5.59 மணிக்கு பி.எஸ்.எல்.எவி-சி61 ராக்கெட்டை இஸ்ரோ விண்ணில் ஏவப்பட்ட நிலையில், இந்த திட்டம் தோல்வி அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை இஸ்ரோ தலைவர் நாராயணன் தனது பேட்டியின் மூலம் தெரிவித்துள்ளார். இது பெரிதும் ஏமாற்றம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதனால் இஸ்ரோ விஞ்ஞானிகள் மிகவும் சோகத்தில் மூழ்கினர்.
இன்று காலை 5.59 மணிக்கு விண்ணில் ஏவப்பட்ட நிலையில், முதல் இரண்டு அடுக்குகள் வெற்றிகரமாக பிரிந்தது. அதனைத் தொடர்ந்து தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மூன்றாவது அடுக்கு பிரியாததால் இந்தத் திட்டம் தோல்வி அடைந்ததாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.