ஹைதராபாத்தில் உள்ள குல்சார் இல்லத்தில் இன்று காலை பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது. சார்மினார் பகுதியில் அமைந்திருக்கும் இந்த வீட்டின் முதல் மாடியில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் 30-க்கும் மேற்பட்டோர் அதில் சிக்கியுள்ளனர். உடனடியாக தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில் பெண்கள், குழந்தைகள் உட்பட 9 பேர் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்த விபத்தில் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்த நிலையில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெறுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.