பாதுகாப்பு மற்றும் புவி கண்காணிப்பிற்காக 1, 696 கிலோ எடை கொண்ட EOS-09 என்ற செயற்கைக் கோளை இஸ்ரோ விஞ்ஞானிகள் வடிவமைத்தனர். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து பி.எஸ்.எல்.வி.சி., 61 ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள் இன்று அதிகாலை 5.59 மணிக்கு விண்ணில் செலுத்தபட்டது.
இன்று (மே 18) விண்ணில் ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் திட்டம் தோல்வி அடைந்தது. ராக்கெட்டின் 3வது அடுக்கு பிரிந்தபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. முதல் இரண்டு அடுக்கு வெற்றிகரமாக பிரிந்த நிலையில், 3வது அடுக்கு பிரியவில்லை என இஸ்ரோ தற்போது தெரிவித்துள்ளது. இருப்பினும், தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படுவதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் அறிவித்துள்ளார்.