கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி 18-வது ஐபிஎல் போட்டிகள் தொடங்கிய நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இடையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போர் காரணமாக ஒரு வார காலத்திற்கு ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப்பட்ட நிலையில் நேற்று மீண்டும் தொடங்கப்பட்டது.
நேற்று முதல் போட்டியில் ஆர்சிபி மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுவதாக இருந்தது. ஆனால் மழையின் காரணமாக போட்டி கைவிடப்பட்டது. இதனால் இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி கொடுக்கப் பட்டதால் ஆர்சிபி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. இதனால் கொல்கத்தா அணி பிளே ஆப் சுற்றிலிருந்து இருந்து வெளியேறியுள்ளது.
நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கடந்த ஐபிஎல் சீசனில் ஸ்ரேயஸ் ஐயர் தலைமையில் களமிறங்கிய நிலையில் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வென்றது. அதன் பிறகு நடந்த ஐபிஎல் ஏலத்தில் பஞ்சாப் அணி ஸ்ரேயஸ் ஐயரை எடுத்தது.
இதுவரை நடந்த ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா 5 போட்டிகளில் வெற்றி பெற்ற நிலையில் நேற்றைய தினம் நடைபெற இருந்த போட்டி கைவிடப்பட்டதால் பிளே ஆப் வாய்ப்பை இழந்துள்ளது கொல்கத்தா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஆர்சிபி தொடர்ந்து முதல் இடத்தில் இருப்பதால் முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்குள் நுழையும் என்று கூறப்படுகிறது.