தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி வேன் 50 அடி ஆழ கிணற்றில் விழுந்த விபத்தில் ஓட்டுநர் உட்பட 5 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மூன்று பேர் காரின் கதவை திறந்து நீந்தி வெளியே வந்தனர்.
இதுகுறித்து அறிந்த போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு காரையும், உயிரிழந்த 5 பேரின் உடல்களையும் மீட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் உறவினர்கள் அளித்த தகவலின் படி கிணற்றுக்குள் இருந்து 45 பவுன் தங்க நகைகள் மற்றும் பொருட்களை தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு மீட்டனர்.