"Apple தொழிற்சாலைகளைச் சீனாவில் தொடங்க காரணம்..." - ஆப்பிள் தலைமை அதிகாரி டிம் குக் சொன்னது என்ன?
Vikatan May 18, 2025 11:48 PM

சமீபத்தில் மத்திய கிழக்கு ஆசிய நாடுகளுக்குப் பயணம் சென்றிருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிகழ்ச்சி ஒன்றில் பேசியது இந்தியா முழுவதும் பரபரப்பைக் கிளப்பியது.

அது...

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்கிடம், "நண்பரே... இந்தியா இந்தியாவைப் பார்த்துக்கொள்ளும். நீங்கள் அங்கே ஆப்பிள் தொழிற்சாலைகளை அமைக்க வேண்டாம். அமெரிக்காவில் தொடங்குங்கள் என்று கூறினேன்" என்று பேசியிருந்தார்.

டொனால்ட் ட்ரம்ப்

சீனாவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகத் தன் தொழிற்சாலைகளை மாற்றும் திட்டம் கொண்டுள்ள ஆப்பிள் நிறுவனம், இந்தியா பக்கம் திரும்பும், அது இந்தியப் பொருளாதாரத்திற்குப் பெரிதும் உதவும் என்று எதிர்பார்த்திருந்தோம்.

ஆனால், ட்ரம்ப் இப்படிக் குண்டைத் தூக்கிப் போட்டதை இந்தியா எதிர்பார்க்கவில்லை.

ஏற்கனவே இந்தியாவில் தொழிற்சாலைகளைத் தொடங்கும் வேலைகளை முன்னெடுத்துவிட்ட ஆப்பிள் நிறுவனம், அந்தப் பணியிலிருந்து பின்வாங்காது என்று தகவல்கள் கூறுகின்றன.

இந்த நிலையில், ஆப்பிள் நிறுவனம் ஏன் அமெரிக்காவில் தொடங்கவில்லை என்றும், அது ஏன் சீனாவைத் தேர்ந்தெடுத்தது என்றும் டிம் குக் சில ஆண்டுகளுக்கு முன்பு பதிலளித்திருக்கிறார். அது...

"சீனாவில் குறைந்த சம்பளத்தில் பணியாளர்கள் கிடைக்கிறார்கள் என்பதால் ஆப்பிள் தொழிற்சாலை சீனாவில் தொடங்கப்பட்டது என்று கூறுகிறார்கள்.

அது முற்றிலும் தவறு. குறைந்த சம்பளம் என்பதைச் சீனா நிறுத்திப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன.

ஆப்பிள் தொழிற்சாலை சீனாவில் இயங்குவதற்கான முக்கிய காரணம், 'இங்கு இருக்கும் திறன்'.

எங்களுக்குக் கருவிகள் தயாரிப்பதிலும், அதைத் துல்லியமாகப் பொருத்தும் மேம்பட்ட திறன் வேண்டும். அது சீனாவில்தான் அதிகம் உள்ளது.

அமெரிக்காவில் இப்படிப்பட்ட நபர்களைக் காண்பது மிகக் கடினம்.

அப்படியே கிடைத்தாலும், ஒரு அறையை நிரப்பும் அளவு கூட ஆட்கள் கிடைக்கமாட்டார்கள். ஆனால், சீனாவில் இருக்கும் திறன் வாய்ந்த நபர்களைக் கொண்டு பல கால்பந்து மைதானங்களை நிரப்பலாம்" என்று கூறியிருந்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.