அடுத்தடுத்து அதிர்ச்சி... ரேஸில் நடிகர் அஜீத்குமார் கார் டயர் வெடித்தது!
Dinamaalai May 18, 2025 11:48 PM

 தமிழ் திரையுலகில்  முன்னணி கதாநாயகர்களில்  ஒருவர் நடிகர் அஜித்குமார். இவரது நடிப்பில்  ஏப்ரல் மாதம் குட் பேட் அக்லி படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும்  வரவேற்பை பெற்றது. இப்படம் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது. முண்ணனி நடிகராக திகழும் அஜித்குமார், கார் பந்தய வீரரும் கூட. 

இந்த ஆண்டு தொடக்கத்தில் துபாயில் நடந்த கார் பந்தய போட்டியில் அவரது அணி 3ம் இடம் பிடித்து அசத்தல் சாதனை படைத்தது.   இத்தாலியில் நடைபெற்ற 12வது மிச்செலின் முகெல்லோ கார் பந்தயத்தில் அஜித்குமார்  ரேஸிங் அணி 3-ம் இடத்தை பிடித்தது.  

அதனை தொடர்ந்து அஜித்குமார் ஐரோப்பாவில் நடைபெற்று வரும் ஜிடி4 யூரோபியன் சீரிஸ் கார் பந்தயத்தில் கலந்து கொண்டு வருகிறார். இந்த பந்தயத்தில் போது ரேஸ் டிராக்கில் சென்று கொண்டிருந்த நடிகர் அஜித்குமார் காரின் முன்பக்க டயர் வெடித்தது. டயர் வெடித்து புகை எழுந்த நிலையில், நடிகர் அஜித் லாவகமாக காரை நிறுத்தியதால் காயம் எதுவுமின்றி தப்பியுள்ளார். அதன் பின்னர் கிரேன் உதவியுடன் பந்தய டிராக்கில் இருந்து கார் அப்புறப்படுத்தப்பட்டது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.