தமிழ்நாடு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சிவகிரியில் நாளை நடைபெறவிருந்த தொடர் உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளார். தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த தம்பதி படுகொலை வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் 20-ஆம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
ஆனால் தற்போது கொலை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதால் உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அண்ணாமலை அறிவித்துள்ளார்.