கரூர் மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்தில் புலியூர் காளிபாளையம் பகுதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 25க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் இருவர் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர்.
பள்ளியில் ஆசிரியர்கள் பயன்படுத்தும் கழிவறைகளை மாணவ, மாணவர்களை கொண்டு தலைமை ஆசிரியர்கள் சுத்தம் செய்ய வைப்பதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில் பள்ளி மாணவிகள் கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ காட்சிகள் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து வட்டார கல்வி அலுவலர் நேரில் வந்து அப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். இது குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் பள்ளித் தலைமை ஆசிரியை பூங்கொடி இடைநீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.