2019 மார்ச் 16 ஆம் தேதி விஷாலுக்கும், ஆந்திராவை சேர்ந்த அனிஷா ரெட்டிக்கும் இடையே திடீரென நிச்சயதார்த்தம் ஏற்பட்டு கோலிவுட்டை பரபரப்புக்கு உள்ளாக்கியது. இருப்பினும் இந்த நிச்சயதார்த்தம் திருமணம் வரை செல்லாமல் இடையிலேயே உறவு முடிந்தது.
இதற்கிடையே நடிகர் சங்க தலைவரான விஷால், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டிடத்தை கட்டி முடித்த பின்பே திருமணம் என அறிவித்தார். கிட்டத்தட்ட அவர் அறிவித்து 9 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது தான் நடிகர் சங்க கட்டிடம் முழுமை அடைந்திருக்கிறது. விரைவில் நடிகர் சங்க கட்டிடம் திறக்கப்படவுள்ளதால் மீண்டும் விஷால் திருமணம் குறித்து பேச்சுக்கள் எழுந்துள்ளது.
அதற்கு பதிலளிக்கும் விதமாக விஷால் தனது திருமணம் குறித்து மனம் திறந்துள்ளார். சமீபத்தில் விஷால் அளித்த பேட்டியில், "நடிகர் சங்க கட்டிடம் தான் எனது கனவு. அதனை கட்டிமுடித்த பின்பே திருமணம் செய்வேன் என்று அறிவித்தேன். வெறும் வாய் வார்த்தைக்காக இப்படி அறிவிக்கவில்லை. ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு செயல்பட்டேன்.
முதலில் வெறும் 3 ஆண்டுகளில் நடிகர் சங்க கட்டிடம் முடிந்துவிடும் என நினைத்தேன். ஆனால், 9 ஆண்டுகளை கடந்துவிட்டது. தற்போது கட்டிட வேலை முழுமையடையும் நிலையில் உள்ளது. ஆகஸ்ட் 15ம் தேதி நடிகர் சங்க கட்டிடத்தை திறக்க உள்ளோம். அநேகமாக அடுத்த 4 மாதங்களில் எனது திருமணம் நடப்பது உறுதி.
எனது பிறந்தநாளான ஆகஸ்ட் 29ம் தேதி கூட எனக்கு திருமணம் நடக்கலாம். பெண் பார்த்துவிட்டோம். பேசி முடித்துவிட்டோம். இது காதல் திருமணம் தான். ஒரு மாதமாக அந்தப் பெண்ணை காதலித்து வருகிறேன். அவர் யார் அவர் பெயர் என்ன என்பதை நேரம் வரும்போது சொல்கிறேன். விரைவில் நல்ல தகவல் சொல்கிறேன்" என்று மகிழ்ச்சியாக கூறியிருக்கிறார்.
அது சாய் தன்ஷிகா என கண்டுபிடித்து காலையிலிருந்து செய்திகளும் கசிந்தது. அதேபோல் இன்று யோகிடா இசை வெளியீட்டு விழாவில் இந்த ஜோடியின் திருமண அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படி தற்போது மேடையிலேயே தன் காதலை விஷால் அறிவித்துள்ளார். சரியான நேரத்தில் கடவுள் எனக்கானவரை காட்டிவிட்டார்.விரைவில் எங்களுடைய திருமணம் எனக் கூறினார். அதே போல் திருமணத்திற்கு பிறகும் தன்ஷிகா தொடர்ந்து நடிப்பார் என வெட்கத்தோடு விஷால் கூறினார்.
அதன் பிறகு பேசிய தன்ஷிகா ஆகஸ்ட் 29 நாங்கள் கல்யாணம் பண்ணிக்க போறோம் என தேதியையும் கூறினார். இது அங்கு இருந்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சி தான்.
விஷயத்தை கேள்விப்பட்ட அனைவரும் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதேபோல் தன்ஷிகா, காலையிலேயே மீடியாவில் இந்த விஷயம் கசிந்து விட்டது.
அதனால் தான் இப்பொழுது சொல்ல வேண்டியதாக போய்விட்டது. இல்லை என்றால் இந்த மேடையை எங்களுக்காக நாங்கள் பயன்படுத்த நினைக்கவில்லை என்றும் கூறியிருந்தார்.
எது எப்படியோ யோகிடா படம் இப்போது இந்த திருமண செய்தியால் கவனம் பெற்றுள்ளது. இது இலவச பிரமோஷனாகவும் மாறிவிட்டது.
நீண்ட காலமாக முரட்டு சிங்கிளாக இருந்தால் விஷால் திருமண பந்தத்தில் இணைவது ரசிகர்களையும் சந்தோஷப்படுத்தி இருக்கிறது. இந்த தற்போது வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.