FLASH: “பாமக கட்சியை இவர்தான் வழிநடுத்துவார்….” கௌரவ தலைவர் ஜி.கே அன்புமணி பளீச்….!!
SeithiSolai Tamil May 20, 2025 12:48 AM

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாமக கட்சியின் முக்கிய அங்கமான வன்னியர் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பலரும் வருகை தந்தனர். கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே மணி, பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், வன்னியர் சங்க மாநில தலைவர் பூத்தா அருள்மொழி, தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட பலர் ஆலோசனை கூட்டத்திற்கு வந்துள்ளனர்.

இந்த நிலையில் கௌரவ தலைவர் ஜி.கே மணி பத்திரிகையாளர்களை சந்தித்து பேசும்போது, இந்த கட்சி வளர்வதற்காக எவ்வளவோ பேர் பல்வேறு தியாகங்களை செய்து சிறை சாலைகளில் தண்டனை அனுபவித்துள்ளனர்.

அடித்தட்டு மக்களுக்கான கட்சியாக தொடர்ந்து அவர்களது முன்னேற்றத்திற்காக குரல் கொடுத்து வருகிற கட்சிதான் பாட்டாளி மக்கள் கட்சி கட்சி தான். நிறுவனர் ராமதாஸ் இருக்கும் பொழுதும், அவர் மறைவிற்குப் பிறகும் இந்த கட்சியை வழிநடத்துபவர் அன்புமணி ராமதாஸ் தான் என கூறியுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.