“வாலி… பிரியமானவளே….” அப்போது தான் கற்றுக்கொண்டேன்…. திரைப்பயணம் குறித்து மனம் திறந்து பேசிய சிம்ரன்….!!
SeithiSolai Tamil May 20, 2025 01:48 AM

பிரபல நடிகரான சசிகுமார் சிம்ரன் நடிப்பில் ரிலீசான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்திற்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் தனது திரைப்பயணம் குறித்து நடிகை சிம்ரன் கூறியதாவது, வாலி, பிரியமானவளே, துள்ளாத மனமும் துள்ளும் ஆகிய படங்களில் நான் நடித்த கதாபாத்திரங்கள் மிகவும் வலிமையானவை.

அப்போதுதான் நான் சரியான இடத்திற்கு வந்துள்ளதாக உணர்ந்தேன். சிறிய வேடம், பாடல் காட்சி என எதுவாக இருந்தாலும் என்னுடைய முழு பங்களிப்பை செலுத்தி நடித்தேன். கடந்த 1999-ஆம் ஆண்டு தான் சரியான கதைகளை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என கற்றுக் கொண்டேன் என்று தனது திரை பயணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.