தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் விஜய் தேவரகொண்டா. இவர் தெலுங்கில் நடித்த கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இந்நிலையில் விஜய் தேவரகொண்டா சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, அவரிடம் நடிகர் ஷாருக்கான் பற்றி கேட்கப்பட்டது. அதாவது நடிகர் ஷாருக்கானை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் அவரிடம் என்ன நீங்கள் சொல்வீர்கள்? என்று கேட்கப்பட்டது.
அதற்கு அவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக ஷாருக்கான் ஒரு நிகழ்ச்சியில் உங்களைவிட ஒருவர் திரைத்துறையில் வெற்றி பெற முடியும் என்று நீங்கள் யாரையாவது நினைத்திருக்கிறீர்களா? என்ற கேள்விக்கு “இல்லை. அது நடக்க வாய்ப்பில்லை…நான்தான் கடைசி நட்சத்திரம்” என பதிலளித்து இருந்தார். அவருடைய பதில் தவறானது. ஷாருக்கான் வெற்றி பெற்ற அளவுக்கு என்னால் வெற்றி பெற முடியும். அவர் கடைசி நட்சத்திரம் இல்லை. நான் வந்து கொண்டிருக்கிறேன் ” என்று விஜய் தேவரகொண்டா கூறினார்.