“லஷ்கர் அமைப்பின் பயங்கரவாதி பாகிஸ்தானில் சுட்டுக்கொலை”… வெளியான தகவல்..!!
SeithiSolai Tamil May 20, 2025 03:48 AM

பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்பு லஷ்கர் இ தொய்பா. அந்த அமைப்பு இந்தியாவில் பல்வேறு பயங்கர தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இந்நிலையில் அந்த அமைப்பின் மூளையாக செயல்பட்ட அபு சைபுல்லா கலித் நேபாளத்தில் வினோத்குமார் என்ற பெயரில் வசித்து வந்துள்ளார்.

மேலும் அவர் நேபாளத்தை சேர்ந்த நக்மா பனு என்ற பெண்ணை திருமணம் செய்து உள்ளார். இந்தியாவில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கீழ் நேபாளத்தில் தாக்குதலை நடத்திவிட்டு பாகிஸ்தானுக்கு தப்பி சென்றுள்ளார்.

தற்போது பாகிஸ்தானின் சிந்து மாகாணம் பிடி மாவட்டம் மத்லிப் பகுதியில் கலித் மர்ம நபர்களால் கொல்லப்பட்டுள்ளார். அதாவது மத்லி பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த கலித்தை பைக்கில் சென்ற மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.