RP-Sanjiv Goenka குழுமத்தின் தலைவர் மற்றும் ஐபிஎல் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, தனது குடும்பத்துடன் திருப்பதி திருமலை கோவிலுக்கு சென்று பக்திபூர்வமாக வழிபாடு செய்தார்.
ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருகை தரும், திருமலையில் இருக்கும் திருப்பதி வெங்கடேஸ்வரர் கோவில், விஷ்ணுவின் அவதாரமாக கருதப்படும் திருவேங்கடமுடையான் பகவானை போற்றும் இந்தியாவின் மிக பிரபலமான பக்தி தலங்களில் ஒன்றாகும்.
இந்த நிலையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா தனது குடும்பத்துடன் திருமலையில் ஏழுமலையானை வழிபட்டார்.
திருப்பதி கோவிலைக் கண்காணிக்கும் திருமலா திருப்பதி தேவஸ்தானம் (TTD) வெளியிட்ட அறிக்கையில், “கொல்கத்தாவைச் சேர்ந்த சஞ்சீவ் கோயங்கா வெங்கடேஸ்வர சுவாமிக்கு ரூ.3.63 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர, ரத்தினங்கள் பதிக்கப்பட்ட புனித கை அலங்காரங்களை தானமாக அளித்துள்ளார். இது 5.2 கிலோ எடையுடையது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புனித அலங்காரங்கள் கோவில் வளாகத்தில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில், வழிபாட்டு மரபுகளுக்கு ஏற்ப, TTD துணை செயல் அலுவலர் சி. வெங்கையா சௌதரியிடம் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டன.
இந்நிலையில், ஐபிஎல் தொடருக்குள் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. வேகப்பந்து வீச்சில் தன் வேகத்தால் கலக்கும் மயங்க் யாதவ் முதுகுவலியால் இந்த சீசன் முழுவதும் பங்கேற்க முடியாமல் தவறினார்.
இவர் இடத்தை நிரப்புவதற்காக, நியூசிலாந்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் வில்லியம் William O’Rourke என்பவரைரூ.3 கோடிக்கு LSG அணி ஒப்பந்தம் செய்துள்ளது.William O’Rourke நியூசிலாந்து T20 அணிக்காக 5 போட்டிகளில் 5 விக்கெட்டுகள், மேலும் உள்நாட்டுச் சீசன்களில் 38 போட்டிகளில் 37 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் லக்னொ வெற்றிப் பயணத்தை மீண்டும் தொடங்க தயாராக உள்ளது. இன்றைய போட்டி உள்பட 3 போட்டிகளிலும் நல்ல ரன்ரேட்டில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு செல்ல வாய்ப்பு உள்ளது. இன்று லக்னொ அணி ஐதராபாத் அணியுடன் விளையாடி வருகிறது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் லக்னொ அணியினர் சற்றும் நம்பிக்கையுடன் அடுத்தடுத்த போட்டியில் விளையாடுவார்கள். திருப்பதி ஏழுமலையான் அருள் லக்னொ அணிக்கு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.