உத்திரபிரதேச மாநிலம் சம்பால் மாவட்டத்தில் மணமகன் மதுபோதையில் வந்ததால் மணப்பெண் ஷாஷி (19) திருமணத்தை பாதியிலேயே நிறுத்தினார். அப்போது தனக்கே தெரியாமல் நண்பர்கள் குளிர்பானத்தில் மதுவை கலந்து விட்டதாக மணமகன் கூறியுள்ளார்.
இருப்பினும் திருமணத்தன்று கூட குடிக்காமல் இருக்க முடியாத நபருடன் நான் வாழ விரும்பவில்லை என மணப்பெண் திட்டவட்டமாக திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். திருமணம் நின்றதால் மாப்பிள்ளை வீட்டார் மணமகள் குடும்பத்தினருக்கு 7 லட்ச ரூபாய் இழப்பீடு கொடுத்துள்ளனர்.