“பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்திய பெண் யூடியூபர்”… தூதரகத்திற்கு கேக் கொண்டு வந்த நபருடன்… வீட்டில் கிடைத்த முக்கிய ஆதாரம்… தீவிர விசாரணை..!!!
SeithiSolai Tamil May 21, 2025 05:48 AM

யூடியூபில் மூலம் பிரபலமான, ‘Travel With Jo’ என்ற பயண வலைதளத்தை இயக்கி வந்த ஹரியானாவைச் சேர்ந்த ஜோதிகா மல்ஹோத்ரா (33), இவர் பாகிஸ்தானுக்காக உளவுத்தொழில் செய்ததற்காக ஹிஸார் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2023-இல் பாகிஸ்தான் உயர் தூதரக அதிகாரி ஏஹ்சான்-உர்-ரஹீம் என்ற நபருடன் தொடர்பு கொண்ட ஜோதி, பாகிஸ்தானுக்குச் சென்று ISI அதிகாரிகளை சந்தித்து, இந்திய ராணுவ இயக்கங்கள், முகாம்கள் பற்றிய முக்கிய தகவல்களை பகிர்ந்ததாக தெரியவந்துள்ளது.

மேலும் பாகிஸ்தானில் ஷாகிர் மற்றும் ராணா ஷஹ்பாஸ் ஆகிய உளவுத்துறையினரை நேரில் சந்தித்ததாகவும், அவர்கள் எண்களை ‘Jat Randhawa’ என்ற பெயரில் சேமித்து, WhatsApp, Telegram, Snapchat வழியாக தொடர்பு வைத்திருந்ததாகவும் விசாரணையில் கூறியுள்ளார்.

இதனால் அவருக்கு எதிராக தேசத்துரோகக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் ஒருங்கிணைப்பு, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டதற்காக, ஜோதிகா மல்ஹோத்ரா மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, தற்போது 5 நாள் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், காவல்துறையினர் அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்றபோது, ஒரு டைரியில் எழுதி வைத்திருந்த கைஎழுத்து குறிப்பு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

அந்த குறிப்பில் அவர் கைது செய்யப்பட்டபோது இருந்த மனநிலையை எழுதி இருந்தார். அதாவது “சவிதாவை பழங்கள் கொண்டு வரச் சொல்லு. வீட்டைப் பார்த்துக்கொள்ளச் சொல்லு. நானும் சீக்கிரம் வந்து விடுவேன்.” என எழுதியுள்ளார். மேலும், “ராண்டாப் D 1 மாதம், குப்தா டாக்டரின் மருந்து 1 மாதம்” என மருந்துப் பட்டியலும் குறிப்பிட்டுள்ளார்.

இக்குறிப்பு “Love you Khush Mush” என்ற வாசகத்துடன் முடிவடைகிறது. இது, கைது செய்யப்பட்ட பிறகு அவர் மீண்டும் வீட்டிற்கு திரும்புவேன் என்ற நம்பிக்கையை காட்டுகிறது.

மேலும் ஜோதி மல்கோத்ரா தூதரக அதிகாரிகளுக்கு கேக் கொண்டு சென்ற வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமீபத்தில் வைரலாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.