“வீட்டில் மர்மமான முறையில் கீழே விழந்த லஷ்கர் தீவிரவாத அமைப்பின் பயங்கரவாதி”… ஹாஸ்பிடலில் சிகிச்சை பெறுவதாக தகவல்..!!
SeithiSolai Tamil May 21, 2025 03:48 PM

லஷ்கர் இ தொய்பா என்ற தீவிரவாத அமைப்பு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டுள்ளது. இந்த தீவிரவாத அமைப்பு இந்தியாவுக்கு எதிராக பல்வேறு தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறது. இந்த அமைப்பின் தலைவராக ஹபீஸ் சயது என்பவர் உள்ளார். இந்த அமைப்பை இந்தியா பயங்கதீவிரவாத ரவாத இயக்கமாக அறிவித்துள்ளது. இதற்கிடையில் லஷ்கர் அமைப்பின் இணை நிறுவனர் அமீர் ஹம்சாவை இந்தியா பயங்கரவாதியாக அறிவித்துள்ளது. இந்நிலையில் அமீர் ஹம்சா லாகூரில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்தார்.

அவர் நேற்று மர்மமான முறையில் வீட்டிலிருந்து கீழே விழுந்து, முகம் உள்ளிட்ட பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவர் தற்போது பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ மற்றும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர் வீட்டில் இருந்து எப்படி கீழே விழுந்தார்? இது விபத்தா? அல்லது திட்டமிட்ட சதியா? போன்ற பல கோணங்களில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.