இங்கிலாந்தின் லண்டன் நகரத்தில், ஒரு பிரிட்டிஷ் நபர் கார் பின்புறத்தில் சிறிய வியாபார அமைப்பை உருவாக்கி இளநீர் விற்பது, சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அந்த நபர், இளநீர் தேங்காவை கூர்மையான கத்தியால் வெட்டி, இந்திய தெரு வியாபாரிகள் போல் இந்தி மொழியில் உரக்க கூவுவதும், வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக பேசுவதும் காணொளியில் தெளிவாக காணப்படுகிறது. இந்த வீடியோ Instagram-இல் பதிவேற்றப்பட்டதிலிருந்து 11 லட்சம் பார்வைகளையும், 44,000 லைக்குகளையும் பெற்றுள்ளது.
View this post on Instagram
இந்த காணொளி இணையத்தில் பரவியதுடன், பல நெட்டிசன்கள் இந்திய உணவுப் பாரம்பரியம் மற்றும் வணிக கலாச்சாரம் உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது எனக் கருத்து தெரிவிக்கின்றனர். ஒருவர், “லண்டன் ஒரு பன்முகச் சமுதாயம். சந்தையின் தேவையை புரிந்து வியாபாரம் செய்கிறார், வாழ்த்துகள்!” என குறிப்பிட்டுள்ளார்.
மற்றொருவர், “இவர் ஆப்பிரிக்கர் இல்ல, தென்னிந்தியர் போல இருக்கிறார்” என நகைச்சுவையாக எழுதியிருக்க, ஒருவர் “இவருக்கு ஆதார் கார்டு கொடுங்க” எனவும் கூறியிருக்கின்றனர். கூடுதலாக, சிலர் அவரை அமெரிக்க பாஸ்கெட்பால் வீரர் லெப்ரான் ஜேம்ஸின் போன்று இருக்கிறார் என சுட்டிக்காட்டியுள்ளனர். இவ்வாறான முயற்சிகள், இந்திய உணவுப் பண்பாட்டை உலகம் முழுவதும் பரப்பும் புதிய வழிகளாக விளங்குகின்றன