Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரில் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.
சுகன்யாவிற்கு குமரவேல் கால் செய்ய தன்னுடைய பிரண்ட் என சமாளித்து விடுகிறார். பின்னர் கல்யாண வீட்டில் ஆடல் பாடல் இருக்கணும் என உமையாள் கூறி ராஜியை டான்ஸ் ஆட சொல்கிறார். கோமதியும் கடைசி விசேஷம் எனக் கூற குழலியே இதையே சொல்லாத அம்மா எனக் கடுப்படிக்கிறார்.
பின்னர் ராஜி மற்றும் கதிர் இருவரும் மாரி பாடலுக்கு டான்ஸ் ஆடுகின்றனர். அதையடுத்து செல்லம்மா பாடலுக்கு செந்தில் மற்றும் மீனா இருவரும் டான்ஸ் ஆட குடும்பத்தினர் சந்தோஷமாக சிரித்திக்கொண்டு இருக்கிறார். அரசி பயத்தில் இருக்கிறார்.
இதையடுத்து சரவணன் மற்றும் தங்கமயிலை டான்ஸ் ஆட அழைக்க அவர் முதலில் தயங்குகிறார். பின்னர் எல்லாரும் வலுக்கட்டாயமாக ஆட வைக்க இருவரும் ஜோடியாக சேர்ந்து டான்ஸ் ஆடிக்கொண்டு இருக்கின்றனர். குடும்பத்தினர் கைத்தட்டுகின்றனர்.
அதையடுத்து பழனி டான்ஸ் ஆடுகிறார். அவருடன் குழலி சேர்ந்து டான்ஸ் ஆட சுகன்யா கடுப்புடன் நிற்கிறார். மாப்பிள்ளை, பொண்ணை டான்ஸ் ஆடச்சொல்ல அரசி கவலையில் நிற்கிறார். இருவரும் வற்புறுத்த அரசி மற்றும் சதீஷ் ஆடுகின்றனர்.
குமரவேல் கால் வர சுகன்யா எடுத்துக்கொண்டு வெளியில் வருகிறார். எல்லாரும் சந்தோஷமா இருக்கீங்க போல. அரசியிடம் போனை கொடுங்க எனக் கேட்க சுகன்யா வேண்டாம் எனச் சொல்ல அதபத்தி எனக்கு கவலையே இல்ல.
நான் அவ முன்னாடி வந்து நிற்பேன். பேசுறதை எல்லார் முன்னாடியும் பேசிடுவேன் எனக் கூறுகிறார். அரசி ரூமில் வந்து அமர அப்போ சுகன்யா வந்து குமார் கால் செய்து இருப்பதாக சொல்கிறார். நீ ஒரே ஒரு தடவை அவனிடம் பேசு என சுகன்யா கேட்க அரசி தயங்குகிறார்.
குமரவேலுக்கு கால் செய்து அரசி பேச என்னை ஏன் சாகடிக்கிறா எனக் கேட்க நீ தான் அதை செய்ற. பண்றதையும் பண்ணிட்டு இன்னொருத்தனை கல்யாணம் பண்ணிக்க போயிட்ட என்கிறார். எங்க அப்பா, அம்மாவுக்காக இந்த கல்யாணம் நடக்கணும் என்கிறார் அரசி.
அதை நீ முதலையே யோசிச்சு இருக்கணும் என்கிறார். தப்புதான் மன்னிச்சிடு என அரசி கேட்க குமரவேல் நேரில வந்து மன்னிப்பு கேளு என்கிறார். அரசி இப்போ என்னால் அங்கு வர முடியாது எனக் கூறிவிடுகிறார். நீ நேரில் வரணும் இல்லையென்றால் அந்த போட்டோவை மாப்பிள்ளை வீட்டினருக்கு அனுப்பி விடுவேன் என்கிறார்.
சுகன்யாவிடம் குமரவேல் சொன்னதை சொல்ல அவரும் நேரில் போய் மன்னிப்பு கேட்டு விடு என்கிறார். அந்த போட்டோவை பொய் என எனக்கே நம்ப முடியலை. ஆனா உங்க அப்பாவுக்கு நெஞ்சு வலி வந்துவிடும் எனக் கூற அரசி மன்னிப்பு கேட்கணும் தானே கேட்கிறேன் என்கிறார்.
சுகன்யா உதவியுடன் வெளியில் செல்ல வர இடையில் கோமதி நிற்க அவரிடம் சுகன்யா பொய்களை சொல்லி சமாளிக்கிறார். அதையடுத்து அவரும் அரசி கல்யாணம் குறித்து சந்தோஷமாக பேசிக்கொண்டு இருக்கிறார்.