உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் ஒரு இளம்பெண் நர்சிங் கல்வி படித்து வருகின்றார். இவர் கடந்த திங்கட்கிழமை தன்னுடைய உறவினர் ஒருவரது வீட்டிற்கு சென்று விட்டு பின்னர் தன்னுடைய கல்லூரி விடுதிக்கு திரும்பினார்.
இந்த மாணவி ஒரு ஷேர் ஆட்டோவில் சென்ற நிலையில் அதில் ஆட்டோ டிரைவர் உட்பட 4 பேர் இருந்துள்ளனர். இந்த ஆட்டோ சென்று கொண்டு இருந்தபோது திடீரென டிரைவர் அவருடைய சீட்டிலிருந்து எழுந்து பயணிகள் இருக்கையில் வந்து அமர்ந்தார்.
பின்னர் அந்த ஆட்டோ ஓட்டுனர் உட்பட 4 வாலிபர்களும் சேர்ந்து அந்த இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நிலையில் பயந்து போன அவர் சத்தம் போட்டார். ஆனால் அவர்கள் மாணவியின் வாயை பொத்தி ஒரு ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு ஆட்டோவை ஓட்டிச் சென்றனர். இதனால் பயந்து போன மாணவி ஓடும் ஆட்டோவில் இருந்து கீழே குதித்த நிலையில் அங்கிருந்தவர்கள் மீட்டு அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அனில் சின்ஹா, ரஞ்சித் சவுகான், ஆகாஷ்ம், ஆட்டோ ஓட்டுனர் சத்தியம் சிங் ஆகியோரை கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் இருக்கிறது. மேலும் அந்த மாணவி ஆட்டோவில் இருந்து குதித்து உயிர்த்தப்பிய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.