“கணவனுக்கு பாத்திரம் கழுவும் வேலை”… மருந்து வாங்குவதற்காக ஒரே ஒரு மகனை ரூ.18,000-க்கு விற்ற தாய்… என் பிள்ளையை கண்டுபிடிச்சு தாங்க… தந்தை கதறல்…!!!
SeithiSolai Tamil May 24, 2025 06:48 PM

ஒடிசா மாநிலத்தில் உள்ள பாடசூர் பகுதியில் நடந்த ஒரு சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது அந்த பகுதியில் பூஜா பரிதா-பிரசாந்த் தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 7 வயதில் சாய்ராம் என்ற ஒரே ஒரு மகன் இருக்கிறார். இதில் கணவன் மனைவி இருவரும் குடும்ப தகராறு காரணமாக கடந்த 4 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் தற்போது பூஜா தன் கணவர் வீட்டிற்கு மீண்டும் வந்தார்.

ஆனால் அவர் குழந்தையை அழைத்து வரவில்லை. தன்மகன் இல்லாததால் பிரசாந்த் இது குறித்து உடனடியாக மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தார். பின்னர் பூஜாவிடம் இதுகுறித்து விசாரணை நடந்த போது அவர் தன் மகனை ரூ.18,000-க்கு விற்பனை செய்ததாக கூறியுள்ளார். அதாவது மருந்து வாங்குவதற்கு பணம் இல்லாததால் தன் மகனை விற்று அந்த பணத்தில் மருந்து வாங்கியதாக பூஜா கூறியுள்ளார்.

இதில் பிரசாந்த் ஒரு ஹோட்டலில் பாத்திரம் கழுவும் வேலை செய்து வரும் நிலையில் ஒரே ஒரு மகன் இருப்பதால் தன் மனைவியின் செயலால் நொந்து போன அவர் மாவட்ட ஆட்சியரிடம் எழுத்துப்பூர்வமாக புகார் கொடுத்துள்ளார்.

அதன் பின் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர் குழந்தையை யாருக்கு விற்றார் என்பது குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.