ஆண்டுதோறும் மே 24ம் தேதி ‘சகோதரர்கள் தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது.
இதற்கேற்ப எந்த ஒரு பிரச்சினை வந்தாலும் அண்ணன், தம்பி இருவரும் ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டு சமாளித்துவிடுவர் என்பது அனைவரும் அறிந்ததே. சில வீடுகளில் 5 வயதில் அண்ணன்- தம்பி, 10 வயதில் பங்காளி என்ற நிலையும் உள்ளது. ஆனால் இதையெல்லாம் மறந்து பிரச்சினைன்னு வந்துட்டா இருவரும் இணைந்து அதை சமாளிக்க போராடுவது வாடிக்கையே.
அதே போலத்தான் அண்ணன்-தங்கை, அக்கா-தம்பி பாசமும். ஆயிரம் வம்பு, தும்புகள் இருந்தாலும், உண்மையான பாசத்துடன் இருக்கும் சகோதரர்களை இந்த நாளில் போற்றுவோம்.!
ஒரு குடும்பத்தில் அப்பாவுக்கு பிறகு சகோதரர்கள் தான் முதல் ஆணாகவும், நண்பர்களாகவும் இருப்பார்கள். ஒருவருக்கு ஒருவர் சண்டை கட்டுவதில் துவங்கி, தன்னுடைய சகோதர சகோதரிகளுக்காக பிறரிடம் சண்டை கட்டுவது, பாசம் காட்டுவது வரை இவர்களுக்கு இணை இவர்களே. அப்படிப்பட்ட சகோதரர்களை சிறப்பிக்கும் தினமே இந்த தேசிய சகோதரர்கள் தினம். இந்த தினத்தில் உங்கள் வாழ்வில் சிறப்பான இடம் பிடித்திருக்கும் உங்கள் சகோதரர்களுக்கு வாழ்த்துக்களையும், அன்பையும் பரிமாறி மகிழ்ச்சியாக இருங்கள்.