இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க..! ஜூன் 14 தான் கடைசி நாள்..!
Newstm Tamil May 24, 2025 11:48 AM

ஆதார் கார்டு இருந்தால் தான் அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் பலன்பெற முடியும். ஆதார் கார்டுடன் பான் கார்டு, வங்கிக் கணக்கு, சிம் கார்டு போன்ற பல்வேறு விஷயங்கள் இணைக்கப்பட்டுள்ளன. எனவே ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணமாகும். அதில் உள்ள தகவல்கள் அனைத்தும் அப்டேட்டுடன் இருக்க வேண்டும்.

ஆதார் கார்டில் அப்டேட் செய்ய 50 ரூபாய் முதல் செலவு செய்ய வேண்டியிருக்கும். சில அப்டேட்களை ஆன்லைன் மூலமாக நாமே செய்துகொள்ளலாம். ஆனால் சில அப்டேட்களை ஆதார் சேவை மையங்கள் மூலமாகவே செய்ய முடியும். இதுபோன்ற சூழலில்தான் ஆதார் கார்டில் இலவசமாக அப்டேட் செய்யும் வசதி வழங்கப்பட்டது.

ஆதார் கார்டில் இலவசமாக அப்டேட் செய்யும் கால அவகாசம் பல முறை நீட்டிக்கப்பட்டது. கடைசியாக வெளியான அறிவிப்பின்படி, இலவச அப்டேட் வசதி வருகிற ஜூன் மாதம் 14ஆம் தேதி வரை உள்ளது. ஆதார் கார்டில் இலவசமாக அப்டேட் செய்ய நீங்கள் https://myaadhaar.uidai.gov.in/ என்ற வெப்சைட் மூலம் அப்டேட் செய்துகொள்ளலாம். இந்த வெப்சைட்டிலேயே அப்டேட்டுக்கு தேவையான ஆவணங்களைப்பதிவேற்றம் செய்யலாம். ஆதார் கார்டில் ஆன்லைன் அப்டேட்டுகளுக்கு மட்டுமே இலவசம். ஆனால் ஆதார் சேவை மையத்திற்குச் சென்று ஆதார் அட்டையில் அப்டேட் செய்தால் அதற்கு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

ஆதார் கார்டு வைத்திருக்கும் அனைத்து நபர்களும் அப்டேட்டாக வைத்திருக்க வேண்டியது அவசியம். ஏனெனில் பல்வேறு விஷயங்களுக்கு ஆதார் கார்டு பயன்படுத்தப்படுகிறது. எனவே ஆதார் கார்டில் உள்ள தகவல்கள் அப்டேட்டாக இல்லாவிட்டால் சிரமங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். அரசின் சில சலுகைகளையும் பெறமுடியாமல் போகலாம்.

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆதார் கார்டு குறித்த வழிமுறைகளை அவ்வப்போது வெளியிடுகிறது. ஆதார் கார்டு 10 ஆண்டுகளுக்கு மேல் இருந்தால் அதிலுள்ள அப்டேட்டை இலவசமாக செய்யலாம். 10 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஆதார் கார்டை கட்டாயம் அப்டேட் செய்தே ஆகவேண்டும்.

அப்டேட் செய்வது எப்படி?

https://myaadhaar.uidai.gov.in/ என்ற முகவரிக்குச் சென்று, 12 இலக்க ஆதார் எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு உள்நுழைய வேண்டும்.

அடுத்து OTP விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, மேலும் தொடரவும்.

ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பருக்கு ஓடிபி வரும். அதை உள்ளிட்டு 'Update aadhaar online' விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

அடுத்ததாக 'Proceed to Update Aadhaar' என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து தேவையான தகவல்களை நிரப்பி அப்டேட் செய்ய வேண்டும்.

ஆதார் கார்டில் அப்டேட் செய்வதற்காக வழங்கப்பட்டுள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இலவசமாக செய்துகொள்ளலாம். இன்னும் ஒரு மாதத்துக்கும் குறைவாகவே அவகாசம் உள்ளது. மீண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்படுவதற்கான வாய்ப்பு குறைவுதான். ஏனெனில், பலமுறை இதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுவிட்டது. எனவே இந்த முறை தங்களுடைய ஆதார் கார்டில் அப்டேட் செய்ய நினைப்பவர்கள் இலவசமாக அப்டேட் செய்து பயன் பெறலாம்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.