இந்திய கிரிக்கெட் அணி வருகிற ஜூன் மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. வருகிற ஜூன் மாதம் 20-ஆம் தேதி இந்தியா இங்கிலாந்து இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இந்த நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான 17 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்தது. அதன்படி சுப்மன் கில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இரண்டு தமிழ்நாடு வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. சாய் சுதர்சன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர். ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சாய் சுதர்சன் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தேர்வாகி இருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெஸ்ட் போட்டிகளில் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற ரசிகர்களின் நீண்ட நாள் ஆசை தற்போது நிறைவேறியுள்ளது.