பிரபல சிங்கள நடிகை மாலினி பொன்சேகா இன்று காலமானார். இவருக்கு 78 வயது ஆகிறது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பைலட் பிரேம்நாத் படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மாலினி.
இவர் சிங்களம், தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சிறிது காலம் அரசியலில் இருந்த மாலினி அந்நாட்டின் எம்.பி-ஆகவும் இருந்தார். இவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.