ஜிம்பாவேவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹென்றி ஓலோங்கா. இவர் கடந்த 1995இல் சர்வதேச தொடரில் ஜிம்பாவே அணியில் அறிமுகமானார். அவர் விளையாடும் காலங்களில் ஜிம்பாவே மற்றும் இந்தியா சர்வதேச கிரிக்கெட்டில் ஒருவருக்கொருவர் எதிராக விளையாடும் போதெல்லாம் முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கருக்கு எதிரான போட்டியை உருவாக்கியவர்.
இவரை அப்போதைய சச்சின் டெண்டுல்கரின் கிரிக்கெட் ஃபேன்ஸ்கள் மறந்திருக்க மாட்டார்கள். ஆனால் இவர் கடந்த 2003 உலக கோப்பை போட்டியில் தனது நாட்டில் ஏற்பட்ட மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் அரசுக்கு எதிராக ஆன்டி பிளவர் கருப்பு கைப்பட்டைகளை அணிந்து விளையாடினார்.
அதோடு அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. அதன் பின் அவர் இங்கிலாந்துக்கு நாடு கடத்தப்பட்டார். பிறகு தனது 26 வயதில் ஒலோங்கா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
தற்போது வரை தனது நாட்டிற்கு செல்ல முடியாமல் ஆஸ்திரேலியாவில் குடியேறி வாழ்ந்து வருகிறார். கிரிக்கெட்டில் இருந்து விலக்கப்பட்டவர். தற்போது பாடகராகவும், படகில் கிளீனர் ஆகவும் வேலை பார்த்து வருகிறார்.