தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு ரூ.9.60 லட்சம் அபராதம் விதித்து தமிழ்நாடு கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையம் உத்தரவிட்டது.
சென்னை இசிஆர் சாலையில் உள்ள ஒடியூர் குளத்தில் விதிகளை மீறி மண் கொட்டியதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
நெடுஞ்சாலைத் துறை பாலப்பணிகளில் ஈடுபட்டிருந்த போது கடலோர மண்டல விதிகளை மீறி மண்ணை கொட்டி வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இது குறித்து செங்கல்பட்டு ஆட்சியரின் புகாரின் அடிப்படையில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பரிந்துரையை ஏற்று நடவடிக்கை மேற்கொண்டு, அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.