SeithiSolai Tamil May 27, 2025 11:48 PM

உத்திரபிரதேச மாநிலத்தில் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட 2 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒவ்வொருவரிடமும் 40 ஆயிரம் முதல் 1 லட்ச ரூபாய் வரை பெற்றுக்கொண்டு பல் மருத்துவரான அனுஷ்கா என்பவர் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளார். அவரிடம் சிகிச்சை பெற்றுக் கொண்ட பலருக்கு முகம் வீங்கியது.

உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்ததால் அனுஷ்கா தலைமறைவானார். இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குபதிவு செய்தப போலீசார் அனுஷ்காவை தேடி வந்தனர். இந்த நிலையில் திவாரி நீதிமன்றத்தில் சரணடைந்த அனுஷ்காவுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.