வருமான வரி தாக்கல் செய்ய செப்டம்பர் 15ஆம் தேதி வரை அவகாசம் நீட்டித்தது மத்திய நிதி அமைச்சகம். ஜூலை 31ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில் செப்டம்பர் 15ஆம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. வருமான வரி தாக்கல் செய்ய கூடுதலாக 45 நாட்கள் அவகாசம் வழங்கி மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. வருமான வரி கணக்கு தாக்கல் இணையதளத்தில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
2022-23 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கு (ஐடிஆர்) தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூலை 31ம் தேதி வரை வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த காலக்கெடு செப்டம்பர் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை இன்று (மே 27) தெரிவித்துள்ளது. மீறினால் அபராதத் தொகை கட்ட நேரிடும் என்பதால், குறிப்பிட்ட காலத்திற்கு வருமான வரி கட்டும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.