தங்கம் , வெள்ளி விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை விலை நிலவரம்..!
Webdunia Tamil May 31, 2025 03:48 PM

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல், ஒரு சவரன் தங்கம் ரூ.71,360-க்கு விற்பனையாகிறது.

மே 26ஆம் தேதி வாரத்தின் தொடக்கத்தில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.71,600-ஆக இருந்தது. ஆனால் வார இறுதியில் அது சற்று குறைந்து, ரூ.240 சரிவுடன் இன்று ரூ.71,360 என்ற நிலைக்கு வந்துள்ளது.

வியாழக்கிழமை விலை சிறிது வீழ்ச்சியடைந்து, ஒரு கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.8,895-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.71,160-க்கும் விற்பனையானது. இது இந்த வாரத்தில் பதிவான குறைந்த விலையாகும்.

பின்னர் வெள்ளிக்கிழமை, விலை சற்று உயர்ந்தது. ஒரு கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.8,920 ஆகியது. அதனடிப்படையில் சவரனுக்கு ரூ.200 உயர்ந்து தற்போது நிலவி வரும் ரூ.71,360-க்கு விற்பனையானது. இந்த விலை சனிக்கிழமையும் தொடர்கிறது.

மற்றொரு பக்கம், வெள்ளியின் விலையிலும் மாற்றமில்லை. தொடர்ந்து ஒன்பதாவது நாளாக ஒரு கிராம் வெள்ளி ரூ.111-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1,11,000-க்கும் விற்பனையாகி வருகிறது.

Edited by Mahendran

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.