அதிமுகவுக்கு வாங்க... துணை முதல்வர் ஆக்குகின்றேன் என அழைப்பு விடுத்தவர் ஆதவ் ஆர்ஜூனா... சீமான் பரபரப்பு!
Dinamaalai May 31, 2025 08:48 PM

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்  சென்னை ராமாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில்  “முன்பு இருந்தது போல இப்போ திரை உலகம் இருக்கின்றதா..? ஒரு திரைக்கலைஞரையோ ஒரு வினியோஸ்தர்களை யாரையாவது சொல்ல சொல்லுங்கள்..? கேளிக்கை வரியை குறிப்பதால் திரைத்துறைக்கு எந்த  நன்மையும் இல்லை, ஒரே ஒரு நிறுவனம், ஒரே ஒரு குடும்பம் மொத்த படங்களையும் வாங்கி விநியோகம் செய்கின்றது. அவர்கள் நினைக்கின்ற படம் தான் வெளியாக வேண்டும், அவர்கள் நினைக்காத படம் வெளியாகாது. அது மாதிரி தான் இருக்கின்றது. தயாரிப்பாளர் சங்கமும் கமலஹாசனும் வைத்த  கோரிக்கையை ஏற்று கேளிக்கை வரி குறைக்கப்பட்டதாக சொல்கிறீர்கள். ஒரு  தலைவன் என்பவன் பாதிப்பு இருக்கிறது என தெரிந்தவுடன் தானாக சரி செய்ய முயற்சி எடுக்க வேண்டும், யாராவது கோரிக்கை வைத்தால் தான் சரி செய்வீர்களா..? தேர்தலுக்கு ஆறு மாதங்கள் உள்ள நிலையில் கேளிக்கை வரியை குறைக்கின்றீர்கள். 

மின்கட்டணம், சொத்து வரி எல்லாம் எப்பொழுது குறைப்பீர்கள்? அதற்கு ஏதாவது வாய்ப்பு இருக்கா? அதனுடைய பெயரே கேளிக்கை வரிதான். இதனால் திரையுலகை வாழ வைத்துவிடுவார்களா? இது அவர்களுக்கு வருகின்ற வருவாய் தான்.

வேறு யாரு இதில் வாழப்போவது? எத்தனை படங்கள் வெளியாகாமல் உள்ளது, எத்தனை படங்கள் திரையரங்குகள் கிடைக்காமல் மூச்சு திணறிக் கொண்டிருக்கிறது, பல தயாரிப்பாளர்கள் என்ன செய்வது என தெரியாமல் துறையை விட்டு விலகி சென்று விட்டார்கள். எந்த படம், யார் தயாரித்தாலும் நாங்கள் வெளியிட்டால் தான் திரையரங்கம் கிடைக்கும் இல்லையென்றால் நாங்களே தயாரிப்போம். எங்கள் நிறுவனத்தில் நடித்தால்தான் திரையரங்கிற்கு செல்லும் என்ற நிலை இருக்கின்றதா இல்லையா சொல்லுங்கள்? இதே  ஆதவ் அர்ஜுனாதான் துணை முதல்வர்  ஆக்குகின்றேன் அதிமுக கூட்டணிக்கு வாருங்கள் எனக் கூறினார்” என ஆவேசமாக பேசியுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.