ஏன் இந்த மாற்றம்?
வாட்ஸ்அப் நிறுவனம், பயனர்களுக்கு சிறந்த பாதுகாப்பு மற்றும் புதிய அம்சங்களை வழங்குவதற்காக அவ்வப்போது தனது செயலியை மேம்படுத்தி வருகிறது. பழைய இயங்குதளங்களில், புதிய தொழில்நுட்பங்களை செயல்படுத்துவது கடினம் என்பதாலும், பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதாலும், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பெரும்பாலான பயனர்கள் புதிய இயங்குதளங்களுக்கு மாறிவிட்டதால், பழைய இயங்குதளங்களுக்கான ஆதரவை நிறுத்துவது தவிர்க்க முடியாததாகிறது.
வாட்ஸ்அப் செயலியில் தகவல் பரிமாற்றம் சார்ந்து ஏராளமான புது அம்சங்கள் மற்றும் சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. ஒருபக்கம் புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், மறுப்பக்கம் வாட்ஸ்அப் செயலி பழைய சாதனங்களில் இயங்கும் வசதி குறைக்கப்பட்டு வருகிறது.முன்னதாக, இந்த மாற்றம் மே 2025-ல் நடைமுறைக்கு வரும் என்று நிறுவனம் தெரிவித்திருந்தது. ஆனால் ஏற்பட்ட சிறிய தாமதம், பயனர்களுக்கு தங்கள் போன்களை மாற்றிக்கொள்ள கூடுதல் அவகாசத்தை அளித்தது.
இன்று அதாவது ஜூன் 1 முதல் iOS 15 அல்லது அதற்கும் குறைவான பதிப்பில் இயங்கும் ஐபோன்களில் வாட்ஸ்அப் ஆதரவு நிறுத்தப்படும். மேலும், ஆண்ட்ராய்டு 5.0 அல்லது அதற்கும் குறைவான பதிப்புகளில் இயங்கும் ஆண்ட்ராய்டு போன்களிலும் வாட்ஸ்அப் செயல்படாது.
இந்த மாற்றத்தால் பாதிக்கப்படும் போன்களின் பட்டியல்
* ஐபோன் 5s
* ஐபோன் 6
* ஐபோன் 6 பிளஸ்
* ஐபோன் 6s
* ஐபோன் 6s பிளஸ்
* ஐபோன் SE (முதல் தலைமுறை)
* சாம்சங் கேலக்ஸி S4
* சாம்சங் கேலக்ஸி நோட் 3
* சோனி எக்ஸ்பீரியா Z1
* எல்ஜி G2
* ஹூவாய் அசென்ட் P6
* மோட்டோ G (முதல் தலைமுறை)
* மோட்டோரோலா ரேசர் HD
* மோட்டோ E 2014
உங்கள் போனை இந்த பிரச்சனைக்காக தூக்கி எறிவதற்கு முன், உங்கள் போன் சமீபத்திய மென்பொருள் புதுப்பிப்பைப் பெற்றுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் போன் iOS 15.1 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பு மற்றும் ஆண்ட்ராய்டு 5.1 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பில் இயங்கும் திறன் கொண்டதாக இருந்தால், வாட்ஸ்அப் உங்கள் போனில் சரியாக செயல்படும்.
உங்கள் போன் பாதிக்கப்படலாம் என்று நீங்கள் நினைத்தால் உடனடியாக பீதி அடைய வேண்டாம். ஆதரவு நிறுத்தப்படுவதற்கு முன், பயனர்கள் தங்கள் சாட் ஹிஸ்டரியை கூகிள் கணக்கில் சேமிக்க வாட்ஸ்அப் அறிவுறுத்துகிறது. இதன் மூலம், உங்கள் எல்லா உரையாடல்களும் புதிய சாதனத்திற்கு சீராக மாற்றப்படுவதை நீங்கள் உறுதிப்படுத்தலாம். இதைச் செய்ய, வாட்ஸ்அப்பைத் திறந்து, செட்டிங்ஸ் (Settings) என்பதைத் தேர்ந்தெடுத்து, சாட்ஸ் (Chats) என்பதைத் தொட்டு, சாட் பேக்கப் (Chat Backup) என்பதைத் தேர்ந்தெடுத்து, பின்னர் திரையில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும். இதைச் செய்வதன் மூலம், ஒரு புதிய போனுக்கு மாறுவது மிகவும் எளிதாகும்.
தொழில்நுட்பம் வேகமாக மாறிவரும் நிலையில், பழைய சாதனங்களுக்கான ஆதரவை நிறுத்துவது தவிர்க்க முடியாதது. பயனர்கள் புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப மாற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். வாட்ஸ்அப்பின் இந்த முடிவு, சில பயனர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தினாலும், ஒட்டுமொத்த பயனர்களின் பாதுகாப்பு மற்றும் சிறந்த பயன்பாட்டு அனுபவத்தை உறுதி செய்வதற்கான ஒரு நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.