அமலுக்கு வந்தது... பாஸ்போர்ட் விதிமுறைகளில் மாற்றம்... இனி திருமணச் சான்றிதழ் கட்டாயமில்லை!
Dinamaalai June 05, 2025 11:48 AM

இனி இதெல்லாம் ரொம்பவே எளிமையாக்கப்பட்டுள்ளது. பாஸ்போட் விண்ணப்ப நடைமுறைகளில் முக்கிய மாறுபாடுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய வெளியுறவு அமைச்சகம் பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் வாழ்க்கைத் துணைவரின் பெயரைச் சேர்க்கவோ அல்லது நீக்கவோ இனி திருமணச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. அதற்குப் பதிலாக, "இணைப்பு J" (Annexure J) எனப்படும் எளிமையான சுய-பிரமாணப் பத்திரம் ஒன்றை பயன்படுத்தலாம் என பிரஸ் இன்பர்மேஷன் பீரோவின் (சென்னை கிளை) அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு தெரிவித்துள்ளது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த "இணைப்பு J" படிவம், திருமணச் சான்றிதழைப் பெறுவதில் அல்லது சமர்ப்பிப்பதில் சிரமங்களை எதிர்கொள்ளும் தம்பதிகளுக்கு பெரும் நிவாரணத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்தப் படிவத்தில், கணவன் மற்றும் மனைவி இருவரும் கூட்டாகத் தாங்கள் திருமணம் செய்துகொண்டவர்கள் எனவும் கணவன்-மனைவியாக வாழ்ந்து வருகின்றனர்  என்றும் சுய-உறுதிமொழி அளிக்க வேண்டும்.

அது ஒரு கூட்டு பிரமாணப் பத்திரம்: இது கணவன் மற்றும் மனைவி இருவரும் இணைந்து கையொப்பமிட வேண்டும்.  
திருமணச் சான்றிதழுக்கு மாற்று: திருமணச் சான்றிதழ் இல்லாத நிலையில் அல்லது அதைச் சமர்ப்பிப்பதில் சிக்கல் இருக்கும் போது, இந்தப் படிவத்தைப் பயன்படுத்தலாம். திருமணச் சான்றிதழுக்கு மாற்று: திருமணச் சான்றிதழ் இல்லாத நிலையில் அல்லது அதைச் சமர்ப்பிப்பதில் சிக்கல் இருக்கும் போது, இந்தப் படிவத்தைப் பயன்படுத்தலாம்.

கணவன் மற்றும் மனைவி இருவரும் இணைந்த சமீபத்திய புகைப்படம் படிவத்தில் ஒட்டப்பட்டு, சுய-அடையாளமிடப்பட வேண்டும் விண்ணப்பதாரர்/கணவர் மற்றும் விண்ணப்பதாரர்/மனைவி இருவரும் தங்கள் கையெழுத்து, பெயர், ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை எண் மற்றும் பாஸ்போர்ட் எண் ஆகியவற்றை வழங்க வேண்டும்.

இந்தச் சீர்திருத்தம், பாஸ்போர்ட் பெறுவதற்கான நடைமுறைகளை மேலும் எளிமைப்படுத்தும். பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளை விரைவாக நிறைவேற்ற உதவும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது இந்திய பாஸ்போர்ட் சேவைகளில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.