simbu
simbu
37 ஆண்டுகளுக்குப் பிறகு இருபெரும் லெஜெண்டுகளான கமலும் மணிரத்னமும் இணையும் திரைப்படம் தக் லைஃப். அந்த படம் இன்று ரிலீஸ் ஆகி இருக்கிறது .ஒரு பேன் இந்தியா திரைப்படமாக வெளியாகி இருக்கிறது .படத்தைப் பற்றி கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதில் கமல் ரங்கராய சக்திவேல் நாயக்கர் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எப்போதும் போல தன்னுடைய அபாரமான நடிப்பை இந்த படத்தில் வழங்கி இருக்கிறார் கமல்.
அவருடன் இணைந்து சிம்பு ,திரிஷா ,நாசர் ,அசோக் செல்வன் ,அபிராமி, ஜோஜூ ஜார்ஜ் ,ஐஸ்வர்யா லட்சுமி என பெரிய நட்சத்திர பட்டாளங்கள் இந்த படத்தில் இருக்கின்றனர். அதனால் இந்த படத்தின் மீது பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது .மணிரத்னம் கமல் என்றாலே நாயகன் திரைப்படம் தான் நம் நினைவுக்கு வரும். 1987 ஆம் ஆண்டு வெளியான நாயகன் திரைப்படம் ஒரு கல்ட் கிளாசிக் திரைப்படமாக அமைந்து விட்டது.
அந்த படத்திற்கு இப்போது வரை ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அப்படி இருக்கும் பட்சத்தில் தான் மீண்டும் மணிரத்னம் கமல் கூட்டணி எனும் பொழுது பெரிய அளவு எதிர்பார்ப்பு இருந்தது. படத்தை பற்றி பெரிய அளவில் புரோமோட் செய்து வந்தார்கள் படக்குழு. ஊர் ஊராக மாநிலம் விட்டு மாநிலம் சென்று படத்தை பெரிய அளவில் புரோமோஷன் செய்து வந்தார்கள்.
இன்று படம் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. மணிரத்னம் அவருடைய இடத்திலிருந்து கொஞ்சம் விலகி இருப்பதாகவே ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மணிரத்னம் கமல் எனும் பொழுது நாயகன் திரைப்படத்தை மனதில் வைத்தே தான் அனைவரும் படத்தை பார்க்க சென்றனர். ஆனால் எதிர்பார்த்தது வேறு நடந்தது வேறு என்பதை போல படம் தங்களை ஏமாற்றி விட்டதாக பெருவாரியான ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதற்கு இடையில் இது சம்பந்தமான மீம்ஸ்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. 50 வினாடிகளில் தக் லைப் திரைப்படத்தை மொத்தமாக முடித்துவிட்ட ஒரு வீடியோவை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர். சஞ்சய் ராமசாமி படத்தில் நடிகர் சத்யனை சஞ்சய் என சூர்யாவிடம் அசின் அறிமுகம் செய்ய அதை பார்த்ததும் சூர்யா சிரித்த விட அசின் அதில் கொஞ்சம் கடுப்பாகி விடுவார். அதைப்போல மக்கள் தக் லைஃப் படத்தை எதிர்பார்த்து போனது வேறு. ஆனால் படத்தில் இருந்தது வேறு என்பதை சுட்டிக்காட்டும் விதமாகவே இந்த ஒரு வீடியோ வைரலாகி வருகின்றன.