காரில் இருந்து மீட்கப்பட்ட மத போதகரின் சடலம்…. தீவிர விசாரணையில் போலீஸ்…!!!
SeithiSolai Tamil June 07, 2025 03:48 AM

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்துள்ள திருச்சி, சென்னை நெடுஞ்சாலைக்கு எதிரே உள்ள காலியிடத்தில் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. பொதுமக்கள் கொடுத்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் காரை திறந்து பார்த்தனர். அப்போது ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்த நிலையில் ஒருவர் சடலமாக இருந்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அதன் பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் அகிலி கிராமத்தை சேர்த்த அமுல்ராஜ் என்பதும், இவர் அங்குள்ள கிராமத்தில் கிறிஸ்தவ ஆலயத்தில் ஆயராக பணி செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அவர் தானாக இறந்தாரா? அல்லது வேறு யாரும் கொலை செய்துள்ளார்களா? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.