Breaking: தர்மபுரியில் கார் விபத்தில் சிக்கிய பீஸ்ட் பட நடிகர் ஷைன் டாம் சாக்கோவுக்கு படுகாயம்… தந்தை உயிரிழப்பு… தாய், சகோதரரருடன் மருத்துவமனையில் அனுமதி…!!!!
SeithiSolai Tamil June 06, 2025 06:48 PM

மலையாள சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ஷான் டாம் சாக்கோ. இவர் மலையாளத்தில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவர் தன்னுடைய குடும்பத்தோடு காரில் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் அவரின் தந்தை சிபி சாக்கோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் நடிகர் ஷைன் டாம் சாக்கோ, அவரது தாயார் மற்றும் சகோதரர் ஆகியோர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் இந்த சம்பவம் பிரபலங்கள் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த விபத்துக்கான காரணம் தெரியவராத நிலையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.