நீட் தேர்வில் முதல் 100 இடத்தில் 6 தமிழக மாணவர்கள்!
Newstm Tamil June 16, 2025 09:48 AM

2025 நீட் தேர்வில் யாரும் 720க்கு 720 மதிப்பெண்கள் பெறவில்லை.  ராஜஸ்தானை சேர்ந்த மகேஷ் குமார் முதலிடம் பிடித்துள்ளார். இவர் 720-க்கு 686 மதிப்பெண் எடுத்துள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்நத் உத்கார்ஷ் அவாதியா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். 

உத்தரப் பிரதேசத்தில் அதிகபட்சமாக 1.70 லட்சம் மாணவர்களும்,  மகாராஷ்டிராவில் 1.25 லட்சம் மாணவர்களும்,  ராஜஸ்தானில் 1.19 லட்சம் மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  தமிழகத்தில் 76 ஆயிரம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

651  முதல்  686 மதிப்பெண்கள் வரை 73 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

தமிழகத்தை பொறுத்தவரை 6 மாணவர்கள் முதல் 100 இடத்தில் இடம்பெற்றுள்ளனர்.  நெல்லையைச் சேர்ந்த மாணவர் சூர்ய நாராயணன் 99.9987779 சதவீதம் பெற்று மதிப்பெண் தரவரிசையில் 27ஆவது இடம் பிடித்துள்ளார்.

அபிநித்  நாகராஜ் 99.9974653 சதவீதம் பெற்று 50-வது இடத்தையும், ஜி.எஸ்.புகழேந்தி 99.9972390 சதவீதம் பெற்று 61ஆவது இடத்தையும், ஹிருதிக் விஜயராஜா 99.9971484 சதவீதம் பெற்று 63ஆவது இடத்தையும், ஏ.ஜெ.ராகேஷ் 99.9964242  சதவீதம் பெற்று 78ஆவது இடத்தையும், பிரஜன் ஸ்ரீவாரி 99.9958811 சதவீதம் பெற்று 88ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

இந்தியா முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் பல் மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, சித்தா படிப்புகள் என மொத்தம் 1.08 லட்சம் இடங்கள் உள்ளன. இதில் 56 ஆயிரம்  இடங்கள்  அரசு கல்லூரிகளிலும், 52 ஆயிரம் இடங்கள் தனியார் கல்லூரிகளிலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.