அந்தமானில் 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!
Dinamaalai June 17, 2025 07:48 AM

அந்தமான் கடல் பகுதியில் இன்று பிற்பகலில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டு இருப்பதாக தேசிய நில ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் சரியாக பிற்பகல் 2.44 மணிக்கு ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவாகி உள்ளது . 

அந்தமான் கடலில் 128 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் 11.06 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 93.49 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.